விஜய் ஆண்டனியின் மகள் எழுதிய கடிதம்? போலீஸார் விசாரணை

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (21:23 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் ஆண்டனி. இவரது மகள் மீரா  இன்று அதிகாலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
 

இது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள  நிலையில், விஜய் ஆண்டனி குடும்பத்தாருக்கு தமிழ் சினிமாத்துறையினர் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று, சென்னை டிடிகே சாலையில்  உள்ள விஜய் ஆண்டனியின் வீட்டிற்கு உடல் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து,   நடிகர், பிரபுதேவா,  நடிகர் சிம்பு, நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா ஆகிய பிரபலங்கள் விஜய் ஆண்டனியின் மகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.
 
இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் ‘’ஐ லவ்யூ ஆல் மிஸ் யூ ஆல்’’ என்று ஒரு  எழுதியதாகவும், 10 வரிகள் கொண்ட கடிதம் ஆங்கிலத்தில் இந்தக்  எழுதப்பட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

இக்கடிதத்தை அவர் மன அழுத்தத்தில் எழுதினாரா? தற்கொகொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதியதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்