விஜய் ஆண்டனியின் அப்பாவும் தற்கொலை செய்து கொண்டாரா? அதிர்ச்சி தகவல்..!

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (14:19 IST)
விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்ட நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் ஆண்டனியின் அப்பாவும் தற்கொலை செய்து கொண்டதாக சமூகவலைதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. 
 
திரைப்பட விழா ஒன்று விஜய் ஆண்டனி பேசியபோது தான் ஏழு வயதாக இருக்கும்போது தன்னுடைய அப்பா தற்கொலை செய்து கொண்டதாகவும் தன்னையும் தன்னுடைய ஐந்து வயது தங்கையையும் வளர்க்க தன்னுடைய அம்மா மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அந்த வலி இன்னும் என் மனதில் இருக்கிறது என்றும் பேசியுள்ளார். 
 
எனவே தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது என்றும் எந்த சூழ்நிலை வந்தாலும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்றும்  அந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி பேசி உள்ளார். ஆனால் அவரது மகளே இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்