பெண்ணிடம் அத்துமீறிய கூல் சுரேசை வெளுத்த மன்சூர் அலிகான்! – ஆடியோ நிகழ்ச்சியில் பரபரப்பு!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (10:21 IST)
சரக்கு பட இசை வெளியீட்டு விழாவில் பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட கூல் சுரேஷை நடிகர் மன்சூர் அலிகான் மேடையில் வைத்து திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் நீண்ட காலமாக இருந்து வருபவர் மன்சூர் அலிகான். தற்போது தானே தயாரித்து நடித்து “சரக்கு” என்ற படத்தை உருவாக்கியுள்ளார் மன்சூர் அலிகான். ஜெயக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் யோகி பாபு, பாக்கியராஜ், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் கூல் சுரேஷும் கலந்து கொண்டார். விழா மேடையில் பேசிய அவர் திடீரென கையில் வைத்திருந்த மாலையை அங்கு நின்று கொண்டிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் பெண் மீது போட்டார். இதனால் அங்கு பரபரப்பு எழுந்தது.

அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனே மாலையை கழற்றி எறிந்ததுடன் கூல் சுரேஷை முறைத்து பார்த்தார். அவரை மரியாதை செய்வதற்காகவே மாலை போட்டதாகவும் தவறான எண்ணம் இல்லை என்றும் கூல் சுரேஷ் தெரிவித்தார். ஆனால் ஒரு பெண்ணின் அனுமதி இன்றி மாலை போட்டது தவறு என கூல் சுரேஷை மேடையிலேயே வைத்து கண்டித்த மன்சூர் அலிகான் அந்த பெண்ணிடம் கூல் சுரேசை மன்னிப்பு கேட்க செய்தார். மேலும் அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட அசௌகர்யத்திற்கு தானும் மன்னிப்பு கேட்டார் மன்சூர் அலிகான்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்