விஜய் ஆண்டனி மகள் மறைவு.. இன்று ‘லியோ’ அப்டேட் கிடையாது..!

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (16:30 IST)
தளபதி விஜய் நடித்த லியோ படத்தின் அப்டேட் கடந்த சில நாட்களாக தினந்தோறும் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இன்று லியோ படத்தின் அப்டேட் கிடையாது என்று அந்த படத்தின் குழுவினர் அறிவித்துள்ளனர்.
 
 விஜய் ஆண்டனியின் மகள் இன்று தற்கொலை செய்து கொண்ட சோகம் காரணமாக திரையுலகமே வருத்தத்தில் உள்ளது. இதன் காரணமாக இன்று ‘லியோ’ அப்டேட் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
விஜய் ஆண்டனி மகள் மறைவுக்கு  தாங்கள் மிகவும் வருந்துவதாகவும் அவரது குடும்பத்தினருக்கு  இந்த சோகத்தை தாங்கிக் கொள்ளும் அளவுக்கு வலிமையை கொடுக்க இறைவனை பிரார்த்திக்கொள்வதாகவும்  ‘லியோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் லியோ படத்தின் போஸ்டர் இன்று வெளியாக இருந்த நிலையில் அதை நாளை ஒத்தி வைத்துள்ளதாகவும் விஜய் ஆண்டனி மகள் காரணமாக ‘லியோ’ அப்டேட் இன்று கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்