ஹீரோவா இனிமே வேணாம்… வடிவேலு எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (10:04 IST)
வடிவேலு சமீபத்தில் நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் பார்த்த ரசிகர்களை படம் திருப்திப் படுத்தவில்லை. இதனால் படம் படுதோல்வி அடைந்தது.

இந்த தோல்வியை அடுத்து வடிவேலு அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அதன் படி இனிமேல் ஹீரோவாக நடிக்காமல் பழையபடி காமெடியன் வேடத்துக்கு திரும்ப முடிவு செய்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்