ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி!

Sinoj
செவ்வாய், 19 மார்ச் 2024 (15:35 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னனி இயக்குனர் ராஜமெளலி. இவர் பாகுபலி என்ற படத்தின் மூலம் உலகளவில் கவனம் பெற்றார். இப்படம் வசூலில் சாதனை படைத்தது.
 
இதையடுத்து, இவர் இயக்கிய ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரன் ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரகனி உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.
 
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரூ.1150 கோடி வசூலீட்டி சாதனை படைத்தது. இப்படத்தில் கீரவாணி இசையில் வெளியான நாட்டு  நாட்டு பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருது வென்றது.
 
இந்த நிலையில், ஆர்.ஆர்.ஆர் படம் நேற்று ஜப்பானில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கான முன்பதிவு கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. ஒரு நிமிடத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்பனையாகின.

நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் உள்ள தியேட்டரில் ஆர்.ஆர்.ஆர் படம் திரையிடப்பட்டது. அங்கு, ராஜமெளலி தன் மனைவியுடன் பங்கேற்று ரசிகர்களுடன் உரையாடினார்.
 
அப்போது, 83 வயது ஜப்பான் மூதாட்டி ஒருவர் ராஜமெளலிக்கு 1,000 ஓரிகம்மி கிரேன்களை பரிசாக வழங்கினார். அதாவது ஓரிகமி கிரேன்கள் ஆரோக்கியம், அதிர்ஷ்டத்திற்காக தனக்குப் பிடித்தவர்களுக்கு வழங்கப்படும் பரிசாகும். இப்படம் தன்னை மகிழ்ச்சி உண்டாக்கியதற்காக ராஜமெளலிக்கு மூதாட்டி பரிசளித்துள்ளார்.
 
இது விலைமதிப்பில்லாத பரிசு என்று ராஜமெளலி குறிப்பிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்