தங்கலான் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்ட விக்ரம்!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (10:25 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது.

கேஜிஎஃப் பகுதியில் இப்போது ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் வித்தியாசமான கெட்டப் இணையத்தில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்