தளபதி 67 படத்தின் டைட்டில் பற்றி கிளம்பிய வதந்தி!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (15:27 IST)
தளபதி 67 படத்தின் டைட்டில் பற்றி கடந்த சில நாட்களாக வதந்தி ஒன்று பரவி வருகிறது.

விக்ரம் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது.

இப்போது முக்கியமான சில ஆக்‌ஷன் காட்சிகளை லோகேஷ் படமாக்கி வருகிறார். அதன் பிறகு காஷ்மீரில் படத்தின் பெரும்பகுதியை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் இந்த படத்துக்கு ‘ராய்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் அதை படக்குழுவினர் மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்