விக்ரம் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. ஜனவரி மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.
இப்போது இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பல வில்லன்கள் நடித்து வரும் நிலையில் அதில் ஒரு வில்லனாக மிஷ்கின் நடித்து வருகிறார். சமீபத்தில் மிஷ்கின் சம்மந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டன.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மிஷ்கின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் சம்மந்தமாக பொதுமேடையில் பேசிவிட்டார். இது விஜய் மற்றும் லோகேஷ் ஆகியோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். அதனால் லோகேஷ் மிஷ்கினிடம் படம் பற்றி எந்த தகவலையும் வெளியே சொல்லவேண்டாம் என அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.