நடிகர் டி ராஜேந்தர் ஆடியோ கம்பெனி தொடக்கம்… பொங்கலுக்கு தேசபக்தி பாடல் ரிலீஸ்!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (09:56 IST)
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமைக் கொண்ட கலைஞராக வலம் வருபவர் டி ராஜேந்தர்.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பலதுறைகளில் செயல்பட்டவர் டி ராஜேந்தர். அவரின் படங்கள் 80 களில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை செலுத்தின. அதன் பின்னர் அவர் அறிமுகப்படுத்திய அவரின் மகன் சிம்பு இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

சில ஆண்டுகளாக சினிமாவில் இடைவெளி விட்டிருந்த டி ஆர் இப்போது தன்னுடைய பெயரில் டி ஆர் ரெக்கார்ட்ஸ் ஆடியோ மற்றும் ம்யூசிக் வீடியோ என்ற நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த ஆடியோ நிறுவனம் மூலமாக தை மாதத்தில் வந்தே வந்தே மாதரம் என்ற தேசபக்தி பாடலை தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியிட உள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்