ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (09:49 IST)
நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

‘ருத்ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தை திடீரென தயாரிப்பாளர் கதிரேசனே இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து சென்னை மற்றும் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு சில கட்டங்களாக நடந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் இப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரைத் திருநாளை முன்னிட்டு இந்த படம் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்