சூர்யா - செல்வராகவன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்...

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (18:04 IST)
சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கும் படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துள்ளது. சூர்யா நடிப்பில், செல்வராகவன் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. 
 
ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் சூர்யா ஜோடியாக நடிக்கின்றனர். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரிக்கின்றனர்.
 
கடந்த மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல், நேற்று முடிவடைந்துள்ளது. இந்தத் தகவலை, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் இரண்டாவது ஷெட்யூல் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்