ஊர் ஊராகச் சென்று ரசிகர்களைச் சந்திக்கும் ராகவா லாரன்ஸ்

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (14:46 IST)
ஊர் ஊராகச் சென்று ரசிகர்களைச் சந்திக்க முடிவு செய்துள்ளார் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்க எனது ரசிகர்களில் ஒருவரான கடலூரை சேர்ந்த ஆர்.சேகர் சென்னை வரும்போது விபத்தில் இறந்து போனார். அவரது குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறியதுடன் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டேன். அவரது இழப்பு எனக்கு மிகுந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்தி விட்டது.
 
அதனால் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். இனி எந்த ஒரு ரசிகரும் என்னை பார்க்க சென்னைக்கு வர வேண்டாம். வரும் வழியில் அவர்களுக்கு ஏற்படும்  சிரமங்களை தவிர்க்க விரும்புகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் இருக்கும் இடங்களுக்கே நேரில் சென்று சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
 
சந்திக்கும் இடம், நேரம், தேதி ஆகிய தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும். அதன் முதல்கட்டமாக வரும் 7ம் தேதி புதன் கிழமை சேலத்தில் ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளேன்” என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்