நடிகர் அஜித், சம்பள விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர் என்பதும், பட வெளியீட்டிற்கு முன்பே முழு சம்பளத்தையும் பெற்றுக்கொள்வதில் உறுதியாக இருப்பார் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் தனது அடுத்த திரைப்படத்தில், அஜித் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவலின்படி, படத்தின் தயாரிப்பாளருக்கும் அஜித்துக்கும் இடையே ஒரு வித்தியாசமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம். அதன்படி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்திற்கான டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகள் முழுவதையும் அஜித்துக்கே கொடுத்துவிடுவார்களாம். தியேட்டர் வெளியீட்டு உரிமையை மட்டும் தயாரிப்பாளர் எடுத்துக்கொள்வார் என்றும், டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமை மூலம் கிடைக்கும் வருவாய்தான் அஜித்தின் சம்பளம் என்றும் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்திற்கு அஜித் ஒப்புக்கொண்டுள்ளதாக ஒரு தரப்பும், இது ஒரு வதந்தி என்றும் அஜித் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் மற்றொரு தரப்பும் கூறி வருகின்றன. இரண்டில் எது உண்மை என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், தமிழ் திரையுலகில் இது ஒரு புதிய சம்பள பரிமாற்ற முறையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை