சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

Siva

செவ்வாய், 29 ஜூலை 2025 (17:45 IST)
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் 'வாடிவாசல்' திரைப்படம் உருவாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை தொடர்ந்து, வெற்றிமாறன் நடிகர் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அந்த திட்டமும் தற்போது கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது.
 
இந்த சூழலில், வெற்றிமாறனுக்கு ஏற்கனவே ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுத்திருந்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, அவரை வைத்துப் படம் தயாரித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதன் விளைவாக, வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிப்பில் ஒரு புதிய படம் உருவாக இருப்பதாகவும், ஆனால் அது 'வாடிவாசல்' இல்லை என்றும், வேறு ஒரு கதை அம்சத்தை கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது.
 
இந்தப் புதிய படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாக திட்டமிடப்பட்ட படங்கள் கைவிடப்படுவதால், "இந்தப் படமாவது டிராப் ஆகாமல் இருக்க வேண்டும்" என்று ரசிகர்கள் குழப்பத்துடனும், எதிர்பார்ப்புடனும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்