‘விஜய் 62’ படத்தில் இணைந்த இரட்டையர்கள்

திங்கள், 5 பிப்ரவரி 2018 (11:14 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில், இரட்டையர்கள் இணைந்துள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ‘விஜய் 62’ என்று  அழைக்கப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தொடங்கியது. முதல் ஷெட்யூல் முடிந்தபிறகு,  கல்கத்தாவில் இரண்டாவது ஷெட்யூல் தொடங்க இருக்கிறது.
 
இந்தப் படத்துக்கு ஸ்டண்ட் டைரக்டர்களாக இரட்டையர்களான ராம் மற்றும் லட்சுமண் கமிட்டாகியுள்ளனர். ‘ஜெய் லவகுசா’, ‘ஜெய் சிம்ஹா’ உள்ளிட்ட பல தெலுங்குப் படங்களுக்கு இவர்கள்தான் ஸ்டண்ட் மாஸ்டர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்