நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் ஆசைக்கு இணங்குமாறு இளம் பெண் ஒருவருக்கு ரூபாய் 2 லட்சம் பணம் வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரம்யா மோகன் என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட இந்த கருத்து, தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
ரம்யா மோகன் தனது பதிவில், தனக்கு தெரிந்த ஒரு பெண்ணை விஜய் சேதுபதி தனது கேரவனில் பாலியல் ஆசைக்கு இணங்குமாறு ரூபாய் 2 லட்சம் கொடுத்ததாகவும், பிற பாலியல் விருப்பங்களுக்காக ரூபாய் ஐம்பதாயிரம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இப்போது விஜய் சேதுபதி சமூக ஊடகங்களில் ஒரு புனிதர் போல் நடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக அந்தப் பெண்ணை விஜய் சேதுபதி பயன்படுத்தினார் என்றும், சமூக வலைதளங்களில் ஆண்கள் புனிதர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்றும் ரம்யா மோகன் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். போதைப்பொருளும், பாலியல் தொடர்புகளும் தான் நடிகர்களின் உண்மையான முகம் என்றும் அவர் காட்டமாக பதிவிட்டிருந்தார்.
ரம்யா மோகனின் இந்த பதிவுக்கு, விஜய் சேதுபதி ரசிகர்கள் சிலர் ஆதாரம் கோரி கருத்து தெரிவித்தனர். அதற்கு ரம்யா மோகன், "உணர்ச்சியற்ற முட்டாள்கள் சிலர் உண்மையை ஒப்புக்கொள்வதை விட, ஆதாரத்தை கேள்வி கேட்பதிலும், பாதிக்கப்பட்டவரை குறை கூறுவதிலும் கவனம் செலுத்துவது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது" என்று பதிலளித்துள்ளார். மேலும், "இது வெறும் கதை அல்ல, ஒரு பெண்ணின் வாழ்க்கை; அந்தப் பெண்ணின் வலி" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரம்யா மோகனின் இந்த பதிவு வைரலாகி வந்த நிலையில், அவர் திடீரென அந்த பதிவை நீக்கிவிட்டார். ஆனால், அந்த பதிவு நீக்கப்படுவதற்கு முன்பே பலரால் ஸ்கிரீன்ஷாட்டாக எடுக்கப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகப் பரவி வருகிறது.