ரசிகர்கள் மன்றங்களை பிரித்த சூர்யா – கார்த்தி !

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (19:56 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர்கள் சூர்யா – கார்த்தி. இருவரும்  தங்கள் ரசிகர்கள் மன்றங்களை பிரித்துவிட்டதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள்  சூர்யா- கார்த்தி. சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும்  நடித்து வருகிறார்.  கார்த்தி விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இருவரும் சகோதரர்களாக இருப்பதால் இருவரது ரசிகர் மன்றங்களும் ஒன்றாகவே இயங்கி வந்தன.

சூர்யா மாணவர்களின் கல்விக்காக அகரம் என்ற பவுண்டேசன் நடத்துவதுபோல், கார்த்தி உழவன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.

 இந்நிலையில் ஒன்றாக இயங்கி வந்த தங்களின் ரசிகர்கள் மன்றங்களை இருவரும் பிரித்துவிட்டதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்