தோப்புக்கரணம் போட்ட மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (18:57 IST)
தோப்புக்கரணம் போட்டதால் பள்ளி மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மா நிலம் போலங்கிர் மாவட்டத்தில் உள்ள பட் நகர் பகுதியில் பாபுஜி மேல் நிலைப் பள்ளியில் இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் நேற்று இப்பள்ளிக்குத் தாமமதமாக வனந்தனர்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்  7   மாணவிகளையும் அழைத்து தாமதமாக வந்ததற்கு 100 தோப்புக்கரணம் போடுமாறு கூறிட்யதாக தெரிகிறது.

அந்த மாணவிகளால் தோப்புக் கரணம் போடமுடியவில்லை, ஒரு கட்டத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் 7 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

 தற்போது அவர்களின் உடல் நிலை சீராக உள்ளதாகக் கூறப்படுகிறது.  மாணவிகளுக்கு தண்டனை அளித்தது குறித்து விசாரணை நடத்த ஒடிஷா மாநில கல்வி மந்திரி சமீர் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்