கனவோடு நிறுத்திக்கொள்ளவும்: யூடியுப் பிரசாந்தை கலாய்த்த தயாரிப்பாளர்!

Webdunia
திங்கள், 24 மே 2021 (18:09 IST)
திரைப்படங்களை விமர்சனம் செய்யும் யூடியூப் பிரசாந்த் அவ்வப்போது அரசியல் மற்றும் சமூகக் கருத்துக்களையும் தெரிவித்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் சற்று முன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 
 
ஒரு ஏக்கர் தோட்டம் . மாமரம், பலா மரம் , கொய்யா மரம், பனை மரம் மற்றும் நிறைய மரங்கள் நிறைந்து. இதற்கு நடுவில் அழகாய் ஒரு வீடு. சாண வாயுவில் எரியும் அடுப்பு , காற்றின் வழியே மின்சாரம். யாரையும் சாரா எளிய வாழ்க்கை ! #என்கனவு . 
 
பிரசாந்தின் இந்த ட்விட்டருக்கு பதிலடி கொடுத்த பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் கூறியதாவது: யாரையும் சாராமல் இவ்வளவு விசயம் செய்யனும்னா தினமும் 4 மக்கிரி சாணி அள்ளனும். அவ்வளவு எளிது அல்ல. கனவோடு நிறுத்திக்கொள்ளவும். ஊரில் நம்ம அனுபவம் அப்படி
 
இதனையடுத்து டுவிட்டர் பயனாளிகளும் இந்த இரண்டு டுவிட்டுகளுக்கு கலாய்த்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்