13 ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பாளர் நாற்காலி… சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (07:36 IST)
ரஜினிகாந்தின் இளையமகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தை இயக்கி தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.  அதன் பிறகு தனுஷ் நடித்த வேலையிலலாத பட்டதாரி 2 படத்தை இயக்கினார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் கோவா உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்திருந்தார். ஆனால் அவர் தயாரித்த படங்கள் வணிக ரீதியில் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து தயாரிப்பைக் கைவிட்டார்.

இந்நிலையில் இப்போது அவர் ஷோ ரன்னராக கேங்ஸ் என்ற வெப் சீரிஸை தயாரித்து மேற்பார்வையிடுகிறார். இந்த தொடரில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். இதண் பூஜை கடந்த மாதம் நடந்த நிலையில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

இந்நிலையில் நேற்று முதல் இந்த சீரிஸின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார் சௌந்தர்யா. மேலும் “13 ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பாளர் நாற்காலியில் அமர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்