நேரடித் தமிழ் படத்தில் ஜெயிலர் புகழ் ‘சிவராஜ் குமார்’… ஸ்கெட்ச் போட்ட முன்னணி இயக்குனர்!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (13:13 IST)
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவர்தான் வில்லன் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் மட்டுமில்லாமல் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் கன்னடம் தாண்டி வெளிமொழி படங்களில் அவர் நடித்ததில்லை.

இந்நிலையில் இப்போது தமிழில் அவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்துள்ள நிலையில் நேரடி தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை கமர்ஷியல் இயக்குனர் கே எஸ் ரவிகுமார் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்