சபரிமலை ஐயப்பன் கோவிலில் ரவிமோகன் - கார்த்தி.. நண்பர்களின் ஆன்மீக பயணம்..!

Siva

வியாழன், 17 ஏப்ரல் 2025 (19:26 IST)
இணையத்தில் வைரலாகும் ஒரு புகைப்படத்தில், 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்த   நடிகர்கள் ரவிமோகன், கார்த்தி ஆகியோர் ஆன்மீக பயணம் மேற்கொண்டு சபரிமலை சென்றிருக்கின்றனர். இதன் மூலம், அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றிகரமாக வெளியானது மற்றும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த படத்தில் அருள்மொழி வர்மனாக ரவி மோகன் மற்றும் வந்தியத்தேவனாக கார்த்தி நடித்திருந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், இருவரும் சபரிமலைக்கு மாலை அணிந்து ஆன்மீக பயணத்திற்கு சென்று, அந்த இடத்தில் எடுத்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள், அவர்களுக்கு  வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
நடிகர் ரவி மோகன், ’கராத்தே பாபு’, ’பராசக்தி’, ’ஜெனி’ போன்ற படங்களில் நடித்து வருகின்றார்,  அதேபோல், நடிகர் கார்த்தி 'வா வாத்தியாரே' மற்றும் 'சர்தார் 2' படங்களில் நடித்துவருகிறார். 

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்