மலையாள சினிமாவின் ஆல்டைம் ஹிட்… மோகன் லால் பட சாதனையை முறியடித்த 2018

திங்கள், 5 ஜூன் 2023 (14:15 IST)
மலையாள சினிமா தனக்கென சிறிய மார்க்கெட்டை கொண்டிருந்தாலும், இந்திய சினிமா துறையில் ஆரோக்யமான ஒரு துறையாக திகழ்கிறது. அங்கு கதையம்சம் உள்ள படங்களும் கமர்ஷியல் படங்களும் சம அளவில் உருவாகி ஆரோக்யமான ஒரு சூழலைக் கொண்டுள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் ரீலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது 2018 என்ற படம். கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் மிகப்பெரிய அளவில் மழை பெய்து, வெள்ளத்தால் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு ஏராளமான பொருட்சேதங்கள் மற்றும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. அதை மையமாக வைத்து 2018 என்ற படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கினார். இதில் டோவினோ தாமஸ் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் ரிலீஸ் ஆனதில் இருந்து மலையாள சினிமாவுலகில் வசூல் மழை பொழிந்து இதுவரையிலான கேரள சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. கேரளாவில் மட்டும் 85 கோடி ரூபாய் வசூல் செய்து மோகன்லாலின் புலிமுருகன் (84 கோடி) பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது. ஒட்டுமொத்த உலகளவில் 160 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்