ஆதிபுரூஸ் ரிலீஸின்போது தியேட்டரில் அனுமனுக்கு இடம்... படக்குழு அறிவிப்பு

திங்கள், 5 ஜூன் 2023 (22:38 IST)
பிரபாஸ் நடிப்பில் தயாராகியுள்ள ஆதிபுருஷ் படம்  விரைவில் ரிலீஸாகியுள்ள நிலையில், ஒரு முக்கிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
 
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்  பிரபாஸ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச படம் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டீசர் அனைத்து இந்திய மொழிகளிலும் சில நாட்களுக்கு முன்  வெளியானது.

இதையடுத்து,  பல கட்ட அனிமேஷன், கிராபிக்ஸ் பணிகள் முடிந்து பெரும் எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளியான ஆதிபுருஷ் ட்ரெய்லர்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதன்படி, ஆதிபுரூஸ் படம் வெளியாகும் முன்பே  பல கோடிக்கு விற்பனையானது. அதன்படி,  ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இத்திரைப்படம் ரூ.170 கோடிக்கு வெளியிடும் உரிமத்திற்கு வியாபாரம் ஆகியுள்ளதாகவும், பிரபல பிபள் மீடியா கம்பெனி என்ற தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை வெளியிடும் உரிமத்தைக் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘’ஆதிபுரூஸ் படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும், ஒவ்வொரு காட்சியிலும் அனுமனுக்கு ஒரு இருக்கை விடப்படும்’’ எனப் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்