'பிரின்ஸ் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!
சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது சரியான ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான அக்டோபர் 21ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் அட்டகாசமான போஸில் சிவகார்த்தியன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சிவகார்த்தியன் ஜோடியாக மரியா நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தை அனுதீப் என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.தமன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது