மீண்டும் நடத்தப்பட்ட சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஷூட்டிங்!

புதன், 28 செப்டம்பர் 2022 (08:48 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வெளியாக உள்ளது பிரின்ஸ் திரைப்படம்.

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் பிரின்ஸ் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.

படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை மரியா ரியோபாஷாப்கா நடிக்கிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் முதல் லுக் மற்றும் தலைப்பு நேற்று வெளியாகி கவனம் பெற்றது. அதையடுத்து இன்று இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது. மேலும் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தை சமீபத்தில் பார்த்த படக்குழு, கிளைமேக்ஸ் காட்சியில் முழு திருப்தி இல்லாததால் மீண்டும் சில காட்சிகளை படமாக்கியுள்ளார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்