சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (19:07 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வந்த பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
 
வரும் தீபாவளி அன்று திரைக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 
 
மேலும் இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது படக்குழுவினர் அனைவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்