புதுப் படத்தை டீலில் விட்ட நயன்தாரா… அப்செட்டில் தயாரிப்பாளர்!

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2022 (17:35 IST)
நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக பல ஆண்டுகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக சந்தை மதிப்புக் கொண்டவராக நயன்தாரா இருந்து வருகிறார். அவர் தனி ஹீரோயினாக நடிக்கும் பல படங்கள் வசூலில் கலக்கின. இதையடுத்து சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட அவர் புதிதாக எந்த படத்தையும் ஒத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் ஏற்கனவே அவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்காக அன்னபூரணி என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த படத்தையும் இப்பொழுது அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்க சொல்லி விட்டாராம். திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடித்த ஒரே படமாக அட்லி ஷாருக் கான் படம் மட்டுமே அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்