பட்ஜெட் எகிறிய சிவகார்த்திகேயன் படம்… அதிருப்தியில் கமல்ஹாசன் நிறுவனம்!

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (07:56 IST)
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கடந்த மாதம் காஷ்மீரில் இதன் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது.

ஆனால் படக்குழு காஷ்மீரில் 60 நாட்கள் ஷூட்டிங் திட்டமிட்ட நிலையில் அங்கு மட்டுமே 90 நாட்கள் ஷூட்டிங் செய்துள்ளதாகவும் அதனால் படத்தின் பட்ஜெட் அதிகமாகிவிட்டதாகவும் அதனால் தயாரிப்பு நிறுவனம் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் கதை பற்றி வெளியான தகவலின் படி சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு ராணுவ வீரராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஒரு ராணுவவீரரின் கதையைதான் இந்த படத்தில் எடுப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்