பிரபாஸின் சலாருடன் மோதும் ஷாருக் கானின் டன்கி!

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (07:52 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் டன்கி திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என ஷாருக் கான் அறிவித்திருந்தார்.

ஆனால் அந்த படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப் படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இப்போது டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்