இன்று நடக்கிறது கமல் மணிரத்னம் படத்தின் ப்ரோமோ ஷூட்!

சனி, 21 அக்டோபர் 2023 (07:35 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் பெரிதாக வசூல் செய்யவில்லை.

இந்நிலையில் மணிரத்னம் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ப்ரமோஷன் வீடியோவுக்கான இந்த படத்தின் ஷூட்டிங் இன்று சென்னையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்