’கமல் 234’ டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த கமல்ஹாசன்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!

திங்கள், 23 அக்டோபர் 2023 (12:57 IST)
கமல்ஹாசன் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது கமல் 234 படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்தார்.

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் கமல் 234. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இன்று இந்த படத்தின் டீசர் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் இந்த டீசர் நவம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்றும் கமல்ஹாசன் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது தெரிவித்தார்.  நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.  

கமலஹாசனின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கமல் 234 படத்திற்கு முன்னதாக அவர் கமல் 233 படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது மற்றும் விலை

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்