லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

vinoth

ஞாயிறு, 6 ஜூலை 2025 (11:59 IST)
வெங்கட் அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி மற்றும் ராம்கி ஆகியோர் நடிப்பில் உருவான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் கடந்த தீபாவளியை முன்னிட்டு ரிலீஸானது. இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.

பீரியட் படமாக உருவாகியுள்ள வரும் இந்த படத்தில் வங்கி ஊழியராக துல்கர் சல்மான் நடித்துள்ளார். பங்குச் சந்தை ஊழலில் வங்கிகளின் பங்கு என்ன என்பது குறித்து இந்த படம் பேசியுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த இந்த படம் துல்கர் சல்மானின் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதையடுத்து அதன் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் நடந்து வருவதாக இயக்குனர் வெங்கட் கூறியுள்ளார். தற்போது அவர் சூர்யா மற்றும் மமிதா பைஜு ஆகியோர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்