சிந்துபாத்' காலைக்காட்சி ரத்து: ரசிகர்கள் அதிருப்தி

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (09:24 IST)
விஜய்சேதுபதி நடித்த 'சிந்துபாத்' திரைப்படம் கடந்த வாரமே வெளியாகவிருந்த நிலையில் இன்று இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு காலை 8 மணி காட்சி முதல் அனைத்து காட்சிகளுக்கும் நேற்று முன் தினம் முதலே டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யப்பட்டது. மேலும் படத்திற்கான அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்டதால் ரசிகர்கள் வெகு ஆர்வத்துடன் இன்றைய காலை காட்சி செல்ல திரையரங்குகளுக்கு சென்றிருந்தனர்.
 
ஆனால் திடீரென இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய காட்சி ரத்து செய்யப்பட்டதாக 7.45 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதனால் திரையரங்குகளுக்கு காலையில் அரக்கபரக்க வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு படம் ரிலீஸ் செய்வதை உறுதி செய்யாமல் ஏன் முன்பதிவு செய்கின்றனர் என பார்வையாளர்கள் திரையரங்கு ஊழியர்களுடன் விவாதம் செய்த நிகழ்வுகளும் நடந்தன
 
விஜய்சேதுபதி படம் ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்படுவது இது முதல்முறை அல்ல. 'கருப்பன்', 'சூப்பர் டீலக்ஸ் என ஒருசில படங்களும் முதல் காட்சியின்போது பிரச்சனை ஏற்பட்டிருக்கின்றது. காலை காட்சிக்கு ரத்துக்கு ஒருசில காரணங்கள் கூறப்பட்டிருந்தாலும் ரசிகர்களின் பொன்னான நேரத்தை இனியாவது வீணாக்காமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது. சிந்துபாத் திரைப்படத்தின் முதல் காட்சி 10.30 மணி முதல் துவங்கும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்