2 திருமணங்கள், 2 விவாகரத்து, 2 குழந்தைகள்: பிக்பாஸ் ரேஷ்மாவின் சோகக்கதை

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (06:29 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கியவுடன் மீரா மிதுனுடன் அபிராமியின் மோதல், அபிராமிக்கு வனிதா குழுவினர்களில் ஆதரவு, இருதரப்பிலும் அழுகை படலங்கள் என பரபரப்பாக போனது
 
ஆனால் சில நிமிடங்களில் வீடே சோகமயமானது. ஒவ்வொருவரும் தங்களுக்கு நேர்ந்த மறக்க முடியாத நிகழ்வு, மறக்க முடியாத இழப்பு குறித்து கூறுகையில் நடிகை ரேஷ்மா தனது சோகக்கதையை கூறியபோது பிக்பாஸ் வீடே கண்ணீர் கடலில் மூழ்கியது
 
முதல் திருமணம் தனக்கு தோல்வி அடைந்ததாகவும், தன்னை அடிமை போல் கணவர் நடத்தியதாகவும் இதனையடுத்து அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று கொண்டதாகவும் கூறிய ரேஷ்மா, அதன்பின்னர் அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். முதலில் நல்லவர் போல் தெரிந்த அந்த அமெரிக்கரும் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரிந்ததால் அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்று தனது இரண்டு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வருவதாக கூறினார்.
 
மேலும் தன்னால் மறக்க முடியாத சம்பவமாக தனது வயிற்றில் ஐந்து மாச சிசு குறைப்பிரசவத்துடன் பிறந்தது என்றும் குழந்தை வெளியே வரும்போது தனக்கு யாருமே உதவிக்கு வராததால் தானே காரை எடுத்து கொண்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்றதாகவும் ஓரிரு மாதங்கள் இன்குபேட்டரில் இருந்த அந்த குழந்தைதான் தற்போது தனக்கு ஆறுதலாக இருப்பதாகவும் தெரிவித்தார். ரேஷ்மாவின் சோகக்கதை பிக்பாஸ் போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் பரிதாபமாக இருந்தது. இதனையடுத்து மோகன் வைத்யா, வனிதா ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் நடந்த செண்டிமெண்ட் நிகழ்வுகளை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்