இதுபற்றி விசாரித்ததில் சிந்துபாத் படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ள கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பாகுபலி முதல், இரண்டாம் பாகங்களை தமிழில் வெளியிட்ட நிறுவனமாகும். அப்போது பாகுபலி தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்நிறுவனம் சார்பில் ராஜராஜன் ரூ. 17.60 கோடி பாக்கி வைத்துள்ளதால் படத்தை ரிலிஸ் செய்ய ஹைதராபாத் கோர்ட்டில் தடை வாங்கியுள்ளனர்.
இப்போது இரு தரப்புக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதனால் சிந்துபாத் படம் எப்படியும் ஜூன் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிந்துபாத் படம் தள்ளிக்கொண்டே போவதால் சிறு படங்களான தர்மபிரபு, ஷவுஸ் ஓனர் மற்றும் மீடியம் பட்ஜெட் படமான கொரில்லா ஆகியப் படங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி படம் வெளியானால் தங்கள் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காது என அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அச்சத்தில் உள்ளனர். அதனால் அவர்களின் படங்களைப் பொறுத்தே மற்றப் படங்கள் ரிலிஸ் ஆகும் எனத் தெரிகிறது.