சின்ன பட்ஜெட் படமான இந்த படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் ஓடினாலே நல்ல லாபத்தை பெற்றுவிடும் என கருதப்பட்டது. அதற்கேற்றவாறு பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாத ஜூன் 28ஆம் தேதியை படக்குழுவினர் தேர்வு செய்து புரமோஷனும் செய்து வந்தனர்.
இந்த நிலையில் திடீரென விஜய்சேதுபதியின் சிந்துபாத்' திரைப்படம் ஜூன் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகுமென அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன், விஜய்சேதுபதியிடமும், 'சிந்துபாத் படக்குழுவினர்களிடம் ரிலீஸ் தேதியை 15 நாட்கள் கழித்து வைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்