சிம்பு தேசிங் பெரியசாமி படத்தின் பிரச்சனை முடிந்தது.. பச்சைக் கொடி காட்டிய ஐசரி கணேஷ்!

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (07:45 IST)
சிம்பு பத்து தல படத்தை முடித்துவிட்டு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்துக்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தைத் தொடங்குவதில் சிம்புவின் முந்தைய படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் மூலமாக ஒரு சிக்கல் எழுந்தது. முன்னதாக ஐசரி கணேஷிடம் தொடர்ந்து 2 படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தை போட்டிருந்தார் சிம்பு. அதன்படி ஒரு படத்தில் மட்டுமே நடித்து முடித்துள்ளார். அடுத்த படத்தில் நடிப்பதற்குள் இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நடிக்க சென்றுவிட்டார். அதனால் தங்கள் கம்பெனிக்கு முடித்துக் கொடுக்காமல் வேறு கம்பெனி படத்தில் நடிக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தைக் கொடுத்திருந்தார்.

ஆனால் இப்போது நடந்த பேச்சுவார்த்தையில் ஐசரி கணேஷ் விட்டுக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் சிம்பு கமல்ஹாசன் நிறுவன படத்தை முடித்துவிட்டு பின்னர் ஐசரி கணேஷ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்