சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் சிம்பு 48 படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால் அதன் பிறகு அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவேயில்லை. இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிம்பு கமல்ஹாசனின் தக்லைஃப் படத்தில் நடிக்க சென்று அந்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.
இதனால் சிம்புவின் 48 ஆவது படமாக தக் லைஃப் அமைந்துள்ளது. இதற்கிடையில் சிம்பு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் சிம்பு தேசிங் இணையும் படம் அவரின் ஐம்பதாவது படமாக இருக்கும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் சிம்பு & தேசிங் இணையும் படத்தை துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவரை தயாரிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அது அடுத்தகட்டத்துக்கு செல்லவில்லை என சொல்லப்படுகிறது.