’மாமன்னன்’ படம் பார்த்த ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா?

புதன், 5 ஜூலை 2023 (07:23 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. 
 
அதுமட்டும் இன்றி இந்த படம் வசூலிலும் சாதனை செய்து வருகிறது என்றும் நான்கு நாட்களில் முப்பது கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. 
 
ஏற்கனவே இந்த படத்தை கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பார்த்து மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாமன்னன் படத்தை பார்த்தார் 
 
சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு என்றும் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மிகச்சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு உதயநிதி பகத் பாஸில் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள் என ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்