லஸ்ட் ஸ்டோரீஸ் மட்டுமில்ல... ரஜினியின் ஜெயிலர் படத்துக்கே டூபீஸ் அணிந்த தமன்னா!

வியாழன், 6 ஜூலை 2023 (11:43 IST)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் திலீப் குமார் பீஸ்ட் பட வெற்றிக்குப்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார்.  இப்படத்தில், நடிகர்   ரஜினியுடன் இணைந்து, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர்.
 
பான் இந்தியா படமாக இப்படம் உருவாகவுள்ளதால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மோகன்லல் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் வேகமாக  நடந்து வரும் நிலையில், சமீபத்தில், தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் சுனில் இப்படத்தில் இணைந்தார், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன்பிக்சர்ஸ் வெளியிட்டது.
இதனிடையே தமன்னாவின் லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடர் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா டூ பீஸ் உடை அணிந்து நடனமாடியிருக்கிறார். இந்த போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்