ஜெயிலர் படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி இதுதானா?.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

புதன், 5 ஜூலை 2023 (13:53 IST)
ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகும், நெல்சன் பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகும் இணைந்துள்ள திரைப்படம் ஜெயிலர். இதனால் வழக்கமாக ரஜினிகாந்த் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு இல்லை. ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியோடு மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பலமொழி கலைஞர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படம் சுதந்திர தின விடுமுறையை ஒட்டி ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஜூலை 29 ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளதாக என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்