சித்தார்த் நடிக்கும் ‘சித்தா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (07:21 IST)
பாய்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். அடுத்து மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்திலும் நடித்தார். ஆனால் அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும் படியான வெற்றிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் கதாநாயகனாக நடித்து தயாரித்து சில மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் காத்திருந்த சித்தா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ் யு அருண்குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 28 ஆம் தேதிதான் பேன் இந்தியன் ரிலீஸான பிரபாஸின் சலார் திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்