அஜித்தின் ரீமேக் படம் தோல்வி...சம்பளத்தை திரும்பி கொடுத்த சூப்பர் ஸ்டார்

சனி, 19 ஆகஸ்ட் 2023 (12:50 IST)
'போலா ஷங்கர்' படம் தோல்வி அடைந்ததால் சிரஞ்சீவி ரூ.10 கோடியை திருப்பிக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள படம்  போலா ஷங்கர். இப்படத்தில் அவருடன் இணைந்து தமன்னா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இப்படம் அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமேக் ஆகும்.

ஆச்சர்யா படத்திற்குப் பின் சிரஞ்சீவி நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை மெகர் ரமேஸ் இயக்கியுள்ளார். ஆதி  நாராயணா, சிவா, திருப்பதி ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர்.

இப்படம் அவரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாவதையொட்டி  இப்படத்தின் புரோமோசன் பணிகள் நடைபெற்றன.

இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட   நிலையில், வெளியாகி தோல்வியடைந்துள்ளது. இதனால் தயாரிப்பாளர்களும் நஷ்டமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில்  சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பேசிய (ரூ.60 கோடி) சம்பளம் முழுவதையும் வாங்கியதாக விமர்சனம் எழுந்த நிலையில், படத் தயாரிப்பாளர் இதனை மறுத்தார்.

'போலா ஷங்கர்' பட ஷூட்டிங்கின்போது ரூ.50 கோடியை தயாரிப்பாளர் சிரஞ்சீவிக்கு கொடுத்ததாகவும்,  மீதி ரூ.10 கோடிக்கு காசோலை கொடுத்ததாகவும், ஆனால், படம் தோல்வி அடைந்ததால் சிரஞ்சீவி ரூ.10 கோடியை திருப்பிக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

சிரஞ்சீவியின் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்