தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில், உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி தியேட்டரில் வெளியான படம் மாமன்னன்.
இதற்கான நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு, இன்று மிக மகிழ்ச்சியான நாள் எனக்கு. உதயநிதி இப்படத்தை வெற்றிப்படமாக மாற்றிவிட்டார். நான் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை படங்களில் நடித்திருக்கிறேன். என் வாழ்நாளின் மொத்தப் படத்திற்கும் இந்த ஒரு படம் சமமாகிவிட்டது. இப்படத்தின் கதையை மாரி செல்வராஜ் கூறும்போது அவரிடம் தெளிவு இருந்தது… ரசிகர்களை கண் இமைக்காமல் படம் பார்க்க வைத்தது ஏ.ஆர். ரஹ்மானின் இசைதான். அவருக்கு நன்றி .. இந்த வாய்ப்பை எனக்கு தந்த ரெட் ஜெயிண்ட் மூவிஸுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.