வெற்றிமாறனின் சிரிப்பால்தான் ‘அட்டகத்தி’ படமே ரிலீஸானதா?... இயக்குனர் ராம் பகிர்ந்த தகவல்!

vinoth

செவ்வாய், 1 ஜூலை 2025 (13:56 IST)
2012 ஆம் ஆண்டு வெளியான  அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இந்த படம் தமிழ் சினிமாவில் தலித் வாழ்வை வெகு சிறப்பாக சொன்ன படங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார். சி வி குமார் தயாரித்த முதல் படம் இதுவாகும்.

இந்த படம் எடுத்து முடித்த பின்னர் பலருக்கும் அந்த படத்தின் சிறப்புத் தெரியவில்லையாம். அதனால் எந்த விநியோகஸ்தரும் படத்தை வாங்க முன்வரவில்லையாம். அதனால் திரை இயக்குனர்களான வெற்றிமாறன், வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோரை அழைத்து ஒரு சிறப்புக் காட்சியை திரையிட்டுள்ளனர்.

அப்போது அந்த படத்தைப் பார்த்த வெற்றிமாறன் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தாராம். அவர் அந்த படத்தை ரசிப்பதைப் பார்த்து அந்த நம்பிக்கையில்தான் ஞானவேல் ராஜா அந்த படத்தை வாங்கி வெளியிட்டாராம். இதை ரஞ்சித் தன்னிடம் தெரிவித்ததாக இயக்குனர் ராம் சமீபத்தில் வெற்றிமாறனோடு நடந்த ஒரு உரையாடலில் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்