99 சாங்ஸ் பார்த்துவிட்டு ஷங்கர் சொன்ன கமெண்ட்… ரஹ்மான் பகிர்வு!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (12:24 IST)
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் கதை எழுதி தயாரித்துள்ள 99 சாங்ஸ் திரைப்படம் ஏப்ரல் 16 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

ஏ ஆர் ரஹ்மான் கதை எழுதி இசையமைத்து தயாரித்திள்ள திரைப்படம் 99 சாங்ஸ். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்துள்ளார் ரஹ்மான். ஏஹான் பட் மற்றும், எடில்சி வர்கஸ் ஆகியோர் இந்த படத்தில் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.14 பாடல்கள் கொண்ட இந்த படத்தின் இசை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட உள்ளது.  அதே போல படம் இந்த மாதத்தில் ரிலீஸாக உள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகளில் ரஹ்மான் இப்போது ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தை உங்களின் இயக்குனர் நண்பர்களின் கருத்துகள் என்னவாக இருந்தன என்பது குறித்த கேள்விக்கு ரஹ்மான் ‘நிறைப் பேரிடம் காட்டவில்லை. ஷங்கர் பார்த்துவிட்டு ஹாலிவுட் படம் போல இருக்கிறது என்று கூறினார். அட்லி கலை மற்றும் கமர்ஷியல் விஷயங்கள் நிறைந்த படமாக உள்ளது எனக் கூறினார்’ எனத் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்