இந்நிலையில் நான்காம் கட்ட பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து நேற்று டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “தற்போது டெல்லியில் நான்காம் கட்ட பரவல் அதிகரித்திருந்தாலும் நாம் ஊரடங்கு விதிக்கமுடியாத சூழல் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,732 கொரோனா பாதிப்புகள் டெல்லியில் உறுதியாகியுள்ளன.
முந்தைய மூன்று கட்ட பரவல்களையும் எதிர்கொண்டது போலவே கட்டுப்பாடுகளுடன் மக்கள் நான்காவது பரவலையும் எதிர்கொள்ள வேண்டும். அதிதீவிர கொரோனா பாதிப்பு இல்லாத மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை தவிர்க்கலாம். வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். மருத்துவ உதவியாளர்கள் அவ்வபோது வந்து பரிசோதித்து செல்வார்கள்.
டெல்லி முழுவதும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி வழங்கும் வயது வரம்பை குறைக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது, அனைத்து கட்சிகளும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கை கோர்க்க வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.