இந்நிலையில் தமிழக அரசின் இந்த தடையால் திருவிழாக்களை நம்பி தொழில் செய்வோர், கிராமிய கலைஞர்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் கிராமிய கலைஞர்கள் உள்ளிட்ட பலர் தமிழகத்தில் சித்திரை திருவிழா உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களையும் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.